முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்க வேண்டும்


முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்க வேண்டும்
x
தினத்தந்தி 6 Dec 2022 12:15 AM IST (Updated: 6 Dec 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்க வேண்டும் என்று புளியங்குடி நகர தி.மு.க. ஆலோசனை கூட்டத்தில் தீர்மானம நிறைவேற்றப்பட்டது

தென்காசி

புளியங்குடி:

தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகிற 8-ந் தேதி தென்காசி மாவட்டத்திற்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்குவதற்கு வருகிறார். அவருடைய வருகையை முன்னிட்டு சிறப்பு ஆலோசனை கூட்டம் புளியங்குடி நகர தி.மு.க. அலுவலகத்தில் வைத்து நடைபெற்றது. நகர அவை தலைவர் வேல்சாமி பாண்டியன் தலைமை தாங்கினார். நகர செயலாளர் அந்தோணிசாமி, நகர சபை தலைவர் விஜயா சவுந்திரபாண்டியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தலைமை பொதுக்குழு உறுப்பினர் பத்திரம் சாகுல் ஹமீது வரவேற்று பேசினார்.

சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட வடக்கு மாவட்ட செயலாளர் ராஜா எம்.எல்.ஏ. பேசியதாவது:-

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் முதல்-அமைச்சராக பொறுப்பேற்ற பிறகு முதன் முறையாக நமது மாவட்டத்திற்கு வருகை தருகிறார். இதில் 1 லட்சத்திற்கும் அதிகமான பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை முதல்-அமைச்சர் வழங்குகிறார்.

விழா முடிந்தவுடன் புளியங்குடி வழியாக செல்லும் அவருக்கு 3 இடங்களில் வரவேற்பு அளிக்கப்படுகிறது. முதலாவதாக நகரசபை தலைவர் விஜயா சவுந்திரபாண்டியன் தலைமையில் மாவட்டத்தின் தொடக்க எல்லையிலும், டி.என்.புதுக்குடி காமராஜர் சிலை அருகிலும், அடுத்து புளியங்குடி பஸ் நிலையம் முன்பு பொதுக்குழு உறுப்பினர் பத்திரம் சாகுல் ஹமீது தலைமையிலும், 3-வதாக சிந்தாமணியில் நகர செயலாளர் அந்தோணிசாமி தலைமையிலும் முதல்-அமைச்சருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

நகர தி.மு.க. அலுவலகத்தில் 100 அடி கொடி கம்பம் அமைக்கப்பட்டு அதில் கட்சி கொடியை முதல்-அமைச்சர் ஏற்றி வைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் பேசினார்.

ஆலோசனை கூட்டத்தில் ஏராளமான தி.மு.க. நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.


Next Story