வீட்டிற்குள் புகுந்த பாம்பு
திருவாடானை அருகே வீட்டிற்குள் புகுந்த பாம்பு பிடிபட்டது.
ராமநாதபுரம்
தொண்டி,
திருவாடானை தாலுகா தினையத்தூர் அருகே உள்ள கீழ்க்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் முத்து மீனாட்சி. நேற்று இவரது வீட்டிற்குள் சுமார் 5 அடி நீளம் உள்ள நல்லபாம்பு ஒன்று புகுந்துள்ளது. வீட்டிலிருந்தவர்கள் நல்ல பாம்பை பார்த்ததும் கத்தி கூச்சல் போட்டவுடன் பாம்பு வீட்டை விட்டு வெளியேறி வீட்டின் ஓரத்தில் இருந்த வேலியில் சுற்றப்பட்டிருந்த வலையில் சிக்கிக் கொண்டது. இது குறித்து தகவல் அறிந்ததும் தீயணைப்பு நிலைய அலுவலர் வீரபாண்டி தலைமையில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்று நல்ல பாம்பை உயிருடன் பிடித்து அப்பகுதியில் உள்ள வனப்பகுதிக்குள் விட்டனர்.
Related Tags :
Next Story