டிரான்ஸ்பார்மரில் ஏறிய ஆடுமேய்க்கும் தொழிலாளி மின்சாரம் தாக்கி படுகாயம்
டிரான்ஸ்பார்மரில் ஏறிய ஆடுமேய்க்கும் தொழிலாளி மின்சாரம் தாக்கி தூக்கிவீசப்பட்டார்.
ஆரணி
டிரான்ஸ்பார்மரில் ஏறிய ஆடுமேய்க்கும் தொழிலாளி மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டதில் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
ஆரணியை அடுத்த அரியப்பாடி கிராமத்தைச் சேர்ந்தவர் விஜயகுமார் (வயது 44). ஆடு மேய்க்கும் தொழிலாளி ஆவார். வீட்டின் அருகே டிரான்ஸ்பார்மர் உள்ளது. இவரது வீட்டில் சரியாக மின்சாரம் வராததால் கோளாறை சரி செய்வதாக கூறி டிரான்ஸ்பார்மரில் ஏறினார். அங்கு எதையோ அழுத்தியதாக தெரிகிறது.
அப்போது திடீரென டிரான்ஸ்பார்மர் தீ பிடித்து எரிந்ததில் விஜயகுமார் மீது மின்சாரம் பாய்ந்ததில் தூக்கி வீசப்பட்டார். அந்த பகுதியில் இருந்தவர்கள் அவரை மீட்டு ஆரணி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். உடல்நிலை ஆபத்தான நிலையில் இருந்ததால் அவர் மேல் சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டார்.
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து ஆரணி தாலுகா போலீசார் வழக்குப்பதிவு மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.