மழைநீர் ஓடையில் அழுகிய நிலையில் ஆண் பிணம்


மழைநீர் ஓடையில் அழுகிய நிலையில் ஆண் பிணம்
x

திருவண்ணாமலையில் மழை நீர் ஓடையில் அழுகிய நிலையில் அடையாளம் தெரியாத ஆண் பிணம் கிடந்தது. அவர் யார்? கொலை செய்யப்பட்டாரா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருவண்ணாமலை

திருவண்ணாமலையில் மழை நீர் ஓடையில் அழுகிய நிலையில் அடையாளம் தெரியாத ஆண் பிணம் கிடந்தது. அவர் யார்? கொலை செய்யப்பட்டாரா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆண் பிணம்

திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகம் எதிரில் உள்ள அஞ்சுகம் நகரில் வேங்கிக்கால் ஏரிக்கு செல்லும் மழை நீர் ஓடை உள்ளது. இந்த பகுதியில் இன்று காலை துர்நாற்றம் வீசியது.

இதையடுத்து அந்த வழியாக சென்ற பொதுமக்கள் மழை நீர் ஓடையை பார்த்தனர். அப்போது அங்கு அழுகிய நிலையில் அடையாளம் தெரியாத ஆண் பிணம் கிடந்தது.

இதை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர்கள் திருவண்ணாமலை தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்போில் போலீசார் விரைந்து வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.

அப்போது உயிரிழந்த நபரின் உடல் அழுகி, புழு வைத்த நிலையில் கிடந்தது. உயிரிழந்த நபர் யார் என்று தெரியவில்லை. மேலும் அவர் உயிரிழந்து 3 நாட்களுக்கு மேல் இருக்கும் என்று போலீசார் தெரிவித்தனர்.

போலீசார் விசாரணை

இதையடுத்து போலீசார் பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து உயிரிழந்த நபர் யார் என்பது குறித்தும், அஞ்சுகம் நகரில் உள்ள டாஸ்மாக் கடையில் இருந்து மது வாங்கி வந்து மழை நீர் ஓடை கால்வாய் மீது அமர்ந்து மது அருந்திவிட்டு கால்வாயில் தவறி விழுந்து உயிரிழந்தாரா அல்லது கொலை செய்யப்பட்டாரா என்பது குறித்தும் போலீசார் தீவிர நடத்தி வருகின்றனர்.


Related Tags :
Next Story