விவசாயி வீட்டில் திருட முயன்றவர் பிடிபட்டார்


விவசாயி வீட்டில் திருட முயன்றவர் பிடிபட்டார்
x

தியாகதுருகம் அருகே விவசாயி வீட்டில் திருட முயன்றவர் பிடிபட்டார்.

கள்ளக்குறிச்சி

தியாகதுருகம்,

தியாகதுருகம் அருகே எஸ்.ஒகையூர் கிராமத்தை சேர்ந்தவர் பழனி (வயது 67). விவசாயி. சம்பவத்தன்று பழனி ஆடு மேய்க்க சென்று விட்டார். பின்னர், மீண்டும் வீடு திரும்பிய போது வீட்டின் முன்பக்க கதவு பூட்டு உடைக்கப்பட்டு, திறந்து கிடந்ததை பார்த்து திடுக்கிட்டார். உள்ளே சென்று பாா்த்த போது மர்ம நபர் ஒருவர் வீட்டில் இருந்து வெளியே ஓடிவந்தார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த பழனி திருடன்... திருடன்... என்று கூச்சலிட்டார். உடனே அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து, அந்த மர்ம நபரை மடக்கி பிடித்து வரஞ்சரம் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். போலீசார் நடத்திய விசாரணையில், திருச்சி மாவட்டம் துவாக்குடி மலை அருகே உள்ள சமாதானபுரம் கிராமத்தை சேர்ந்த பெரியகண்ணன் மகன் சிங்காரவேலன்(32) என்பதும், பழனி வீட்டில் திருட முயன்றபோது, பிடிபட்டதும் தெரியவந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சிங்காரவேலனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story