திரளான பக்தர்கள் தரிசனம்
புரட்டாசி சனிக்கிழமையையொட்டி பெருமாள், ஆஞ்சநேயர் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
புரட்டாசி சனிக்கிழமையையொட்டி பெருமாள், ஆஞ்சநேயர் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
கோலவாமனப்பெருமாள்
சிக்கல் சிங்காரவேலவர் கோவிலில் அமைந்துள்ள கோலவாமனப் பெருமாளுக்கு நேற்று புரட்டாசி 2-வது சனிக்கிழமையொட்டி சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. அதேபோல் சிக்கல் அருகே ஆவராணி கிராமத்தில் அனந்த நாராயண பெருமாள் கோவில், கீழ்வேளூர் அருகே திருக்கண்ணங்குடி தாமோதர நாராயண பெருமாள் கோவில், கீழ்வேளூர் யாதவ நாராயண பெருமாள் கோவில் உள்ளிட்ட கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
வண்டுறை மாரியம்மன் கோவில்
வாய்மேட்டை அடுத்த வண்டுவாஞ்சேரி வண்டுறை மாரியம்மன் கோவிலில் சிறப்பு அபிஷேக, ஆராதனை நடந்தது. முன்னதாக மாரியம்மனுக்கு பால், பன்னீர், இளநீர், சந்தனம் உள்ளிட்டவைகளால் அபிஷேகம் செய்யப்பட்டு, சாமிக்கு சந்தனக்காப்பு அலங்காரம் செய்யப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பின்னர் சாமி சிம்மவாகனத்தில் எழுந்தருளி கோவிலை சுற்றி வலம் வந்தது.
அஞ்சநேயர்
தலைஞாயிறை அடுத்த உம்பளச்சேரி சமயபுரத்து மாரியம்மன் கோவிலில் தனி சன்னதி கொண்டு அருள் பாலிக்கும் வைராக்கிய ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. முன்னதாக ஆஞ்சநேயருக்கு பால், பன்னீர், இளநீர், சந்தனம், நெய், தேன், திரவியம் உள்ளிட்டவைகளால் அபிஷேகம் நடைபெற்று வண்ண மலர்களால் ஆஞ்சநேயர் அலங்கரிக்கப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
கரியமாணிக்க பெருமாள் கோவில்
தலைஞாயிறை அடுத்த ஓரடியம்புலம் கரியமாணிக்க பெருமாள் கோவிலில் பெருமாளுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன.
இந்த கோவிலில் தனி சன்னதி கொண்டு அருள் பாலிக்கும் ராம பக்த விஸ்வரூப ஆஞ்சநேயருக்கு சிறப்பு வழிபாடு நடந்தது. தொடர்ந்து சாமி வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.