விழுப்புரத்தில் பட்டாணி கடை, குடோனில் தீ விபத்து ரூ.3 லட்சம் பொருட்கள் சேதம்


விழுப்புரத்தில்    பட்டாணி கடை, குடோனில் தீ விபத்து    ரூ.3 லட்சம் பொருட்கள் சேதம்
x

விழுப்புரத்தில் ஏற்பட்ட தீவிபத்தில் பட்டாணி கடை, குடோனில் இருந்த ரூ.3 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் சேதமானது.

விழுப்புரம்


விழுப்புரம் மாம்பழப்பட்டு சாலையில் அபிப்ரஹ்மான் என்பவருக்கு சொந்தமான பட்டாணி கடை மற்றும் பொரி மொத்த குடோன் உள்ளது. இந்த குடோனில் இருந்து பட்டாணி மற்றும் பொரி, கடலை, சிப்ஸ் உள்ளிட்ட பொருட்கள் தயார் செய்து விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள பல்வேறு சில்லரை கடைகளுக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் காலை 6.45 மணியளவில் அந்த குடோனில் இருந்து திடீரென கரும்புகை வெளியேறியது. சிறிது நேரத்தில் அப்பகுதி முழுவதும் பெரும் புகை மண்டலமாக காட்சியளித்தது. இது பற்றி தகவல் அறிந்ததும் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து, தண்ணீரை பீய்ச்சியடித்து தீயை அணைத்தனர். இருப்பினும் அந்த கடை மற்றும் குடோனின் பெரும்பகுதியும் மேலும் பொருட்களும் தீயில் எரிந்து சேதமடைந்தது. குடோனில் மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாகவும், சேத மதிப்பு ரூ.3 லட்சம் இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.


Next Story