கரும்பு தோட்டத்தில் திடீர் தீ விபத்து


கரும்பு தோட்டத்தில் திடீர் தீ விபத்து
x

கரும்பு தோட்டத்தில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது.

ஈரோடு

அந்தியூர்

அந்தியூர் அருகே உள்ள காட்டூர் பட்டறை தோட்டத்தை சேர்ந்தவர் சவுந்தரராஜன். விவசாயி. இவருக்கு சொந்தமான கரும்பு தோட்டம் அந்த பகுதியில் உள்ளது. நேற்று காலை கரும்பு தோட்டத்துக்கு சவுந்தரராஜன் சென்று அங்கு விவசாய வேலைகளில் ஈடுபட்டு கொண்டிருந்தார்.

மாலை 3 மணி அளவில் கரும்பு தோட்டத்தில் திடீரென தீப்பிடித்தது. பின்னர் தீ மளமளவென தோட்டம் முழுவதும் பரவி கொழுந்துவிட்டு எரிந்தது. இதை கண்டதும் அவர் ஓடிச்சென்று தண்ணீரை ஊற்றி தீயை அணைக்க முயன்றார். ஆனால் முடியவில்லை. உடனே அவர் இதுபற்றி பவானி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தார்.

தகவல் கிடைத்ததும் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று தண்ணீரை பீய்ச்சி அடித்து ½ மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். எனினும் இந்த தீ விபத்தில் ½ ஏக்கர் பரப்பளவிலான கரும்பு பயிர்கள் எரிந்து நாசம் ஆனது.

இதுகுறித்து தீயணைப்பு வீரர்கள் கூறுகையில், 'மின் கம்பி உரசி, அதனால் ஏற்பட்ட தீப்பொறி காரணமாக தீ விபத்து ஏற்பட்டு இருக்கலாம்,' என தெரிவித்தனர்.


Next Story