கடைக்குள் புகுந்த கார்


கடைக்குள் புகுந்த கார்
x

வில்லுக்குறியில் கார் கடைக்குள் புகுந்து அய்யப்ப பக்தர்கள் 6 பேர் காயம்

கன்னியாகுமரி

அழகியமண்டபம்,

கர்நாடக மாநிலம் கோலார் மாவட்டத்தை சேர்ந்த அய்யப்ப பக்தர்கள் ஒரு காரில் சபரிமலைக்கு சென்றனர். பின்னர் அங்கிருந்து புறப்பட்ட அவர்கள் நேற்று அதிகாலை 5 மணிக்கு குமரி மாவட்டம் வில்லுக்குறிக்கு வந்த போது திடீரென கார் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது.

இதில் சாலையோர ஜவுளிக் கடை மீது மோதிய கார், பிறகு மரத்தில் மோதி நின்றது. இந்த விபத்தில் கார் பலத்த சேதமடைந்தது. மேலும் அதிலிருந்த 6 பக்தர்கள் காயமடைந்தனர். உடனே அக்கம் பக்கத்தினர் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் விபத்து நடந்த இடத்தை வில்லுக்குறி கிராம நிர்வாக அதிகாரி பழனிச்சாமி மற்றும் போலீசார் பார்வையிட்டனர்.


Next Story