ஸ்கூட்டரில் சென்ற ஆசிரியையிடம் 7 பவுன் சங்கிலி பறிப்பு
வைத்தீஸ்வரன்கோவில் அருகே ஸ்கூட்டரில் சென்ற ஆசிரியையிடம் 7 பவுன் சங்கிலியை மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் பறித்து சென்றனர்.
சீர்காழி:
வைத்தீஸ்வரன்கோவில் அருகே ஸ்கூட்டரில் சென்ற ஆசிரியையிடம் 7 பவுன் சங்கிலியை மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் பறித்து சென்றனர்.
ஆசிரியை
மணல்மேடு ஆத்தூர் கேசிங்கன் ஜி.என். நகரை சேர்ந்தவர் ராஜராஜன். இவருடைய மனைவி சண்முகப்பிரியா (வயது 36).இவர் வக்கிர மாரி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார்.இந்த நிலையில் நேற்று சண்முகப்பிரியா கொள்ளிடத்தில் உள்ள தனது தாய் வீட்டிற்கு ஸ்கூட்டரில் சென்று கொண்டிருந்தார்.
7 பவுன் சங்கிலி பறிப்பு
வைத்தீஸ்வரன் கோவில் அருகே அட்டகுளம் என்ற இடத்தில் சென்றபோது பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்த 2 மர்ம நபர்கள் சண்முகப்பிரியா கழுத்தில் கிடந்த 7 பவுன் சங்கிலியை பறித்து கொண்டு சென்றனர். அப்போது ஸ்கூட்டரில் இருந்து தடுமாறி சண்முகப்பிரியா கீழே விழுந்தார். இதில் படுகாயம் அடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக சீர்காழி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.
மர்ம நபர்களுக்கு வலைவீச்சு
இதுகுறித்த புகாரின் பேரில் வைத்தீஸ்வரன் கோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.