பள்ளி ஆசிரியையிடம் 3½ பவுன் தங்க சங்கிலி பறிப்பு


பள்ளி ஆசிரியையிடம் 3½ பவுன் தங்க சங்கிலி பறிப்பு
x

பள்ளிஆசிரியையிடம் 3½ பவுன் தங்க சங்கிலியை பறித்த மர்ம ஆசாமிகளை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

திருச்சி

சமயபுரம், ஜூலை.21-

பள்ளிஆசிரியையிடம் 3½ பவுன் தங்க சங்கிலியை பறித்த மர்ம ஆசாமிகளை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

ஆசிரியை

மண்ணச்சநல்லூர் அருகே உள்ள நொச்சியம் குமரக்குடி பகுதியைச் சேர்ந்தவர் இளங்கோ. இவரது மனைவி ராதா (வயது40). இவர் திருவெள்ளறை அருகே உள்ள காளவாய்பட்டி அரசு நடுநிலைப்பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். நேற்று மதியம் பள்ளி மாணவர்களை விளையாட்டுப் போட்டிக்காக மண்ணச்சநல்லூர் அரசு மேல்நிலைப் பள்ளிக்கு அழைத்து வந்தார். போட்டி முடிந்தவுடன் மாணவர்களை பஸ்சில் காளவாய்பட்டிக்கு ஏற்றி அனுப்பிவிட்டு, ராதா இருசக்கர வாகனத்தில் பள்ளிக்கு சென்று கொண்டிருந்தார்.

சங்கிலி பறிப்பு

திருவெள்ளறை அருகில் உள்ள கொராலி கொட்டம் பஸ் நிறுத்தம் அருகே சென்றபோது பின்னால் வந்த 2 மர்ம ஆசாமிகள் ஆசிரியையின் கழுத்தில் அணிந்திருந்த3½ பவுன் தங்க சங்கிலியை பறித்துக்கொண்டு மின்னல் வேகத்தில் தப்பினர். இது குறித்த புகாரின் பேரில் மண்ணச்சநல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ்குமார் வழக்குப்பதிவு செய்து தங்க சங்கிலியை பறித்தஆசாமிகளை தேடி வருகிறார்.


Next Story