விவசாய நிலத்தில் 10 அடி நீள மலைப்பாம்பு பிடிபட்டது


விவசாய நிலத்தில் 10 அடி நீள மலைப்பாம்பு பிடிபட்டது
x

ஜோலார்பேட்டை அருகே விவசாய நிலத்தில் 10 அடி நீள மலைப்பாம்பு பிடிபட்டது. இதனால் பெண்கள் அலறியடித்து ஓடினர்.

திருப்பத்தூர்

ஜோலார்பேட்டையை அடுத்த ஏலகிரி ஊராட்சிக்கு உட்பட்ட தாமரைக்குளம் அருகே உள்ள முரடன் வட்டத்தை சேர்ந்தவர் குமார். இவரது நிலத்தில் நிலக்கடலை அறுவடை செய்யும் பணி நடைபெற்றது. பெண்கள் நிலக்கடலை அறுவடை செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது 10 அடி நீள மலைப்பாம்பு ஒன்று ஊர்ந்து வந்தது. இதனால் நிலத்தில் வேலை செய்து கொண்டிருந்த பெண்கள் அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர். பின்னர் இதுகுறித்து திருப்பத்தூர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

அதன்பேரில் நிலைய அலுவலர் முருகன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் சென்று மலைப்பாம்பை பிடித்து வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். இதனை பெற்றுக்கொண்ட வனத்துறையினர் ஏலகிரிமலை காப்பு காட்டில் விட்டனர்.


Next Story