பணம் வைத்து சூதாடிய 7 பேர் கைது


பணம் வைத்து சூதாடிய 7 பேர் கைது
x

பணம் வைத்து சூதாடிய 7 பேர் கைது செய்யப்பட்டனர்.

புதுக்கோட்டை

வடகாடு:

வடகாடு அருகே ஆவணம், கைகாட்டி, ஈச்சன்விடுதி பாலம் பகுதிகளில் பணம் வைத்து சூதாட்டம் நடைபெறுவதாக தனிப்படை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஈச்சன்விடுதி பாலம் பகுதியில் பணம் வைத்து சூதாடி கொண்டிருந்த அடப்பன்வயலை சேர்ந்த பசீத் அலி (வயது 34), அய்யனார்புரம் முதல் வீதியை சேர்ந்த சந்திரதுரை (48), பெரியார் நகரை சேர்ந்த ரமேஷ் (34), அம்பாள்புரம் 3-ம் வீதியை சேர்ந்த சுப்பிரமணியன் (38), தோப்புக்கொல்லையை சேர்ந்த கமலநாதன் (49), சின்னப்பா நகரை சேர்ந்த சரவணன் (43), உசிலங்கொல்லையை சேர்ந்த மாரிமுத்து (39) ஆகிய 7 பேரை கைது செய்து வடகாடு போலீசாரிடம் ஒப்படைத்தனர். மேலும் கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து 8 செல்போன்கள் மற்றும் ரூ.81,430-ஐ போலீசார் பறிமுதல் செய்தனர்.


Next Story