வடகிழக்கு பருவமழையினால் பெரம்பலூர் மாவட்டத்தில் மேலும் 7 ஏரிகள் நிரம்பின


வடகிழக்கு பருவமழையினால் பெரம்பலூர் மாவட்டத்தில் மேலும் 7 ஏரிகள் நிரம்பின
x

வடகிழக்கு பருவமழையினால் பெரம்பலூர் மாவட்டத்தில் மேலும் 7 ஏரிகள் நிரம்பின.

பெரம்பலூர்

மொத்தம் 24 ஏரிகள் நிரம்பின

பெரம்பலூர் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழையினால் ஏரி, குளங்கள் மீண்டும் நிரம்பி வருகின்றன. இதில் பொதுப்பணித்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள 73 ஏரிகளில், 17 ஏரிகள் நிரம்பி, அதனருகே உள்ள ஏரிகளுக்கு தண்ணீர் சென்றது. மேலும் தற்போது வயலூர் ஏரி, கைப்பெரம்பலூர் ஏரி, கீழப்பெரம்பலூர் ஏரி, பூலாம்பாடி சிறிய ஏரி, பெரியம்மாபாளையம் ஏரி, தழுதாழை ஏரி, அரணாரை ஏரி ஆகிய 7 ஏரிகள் நிரம்பியது. அந்த ஏரிகளில் இருந்து உபரிநீர் வெளியேல் அருகே உள்ள ஏரிகளுக்கு சென்று கொண்டிருக்கிறது. இதனால் மாவட்டத்தில் மொத்தம் 24 ஏரிகள் நிரம்பி உள்ளன.

நிரம்பும் தருவாயில் 6 ஏரிகள்

மேலும் பெரம்பலூர் கீழ ஏரி, ஆயக்குடி ஏரி, பாண்டகபாடி ஏரி, கிளியூர் ஏரி, லாடபுரம் சிறிய ஏரி, துறைமங்கலம் சிறிய ஏரி ஆகியவை நிரம்பும் தருவாயில் உள்ளது. இதனால் விவசாயிகளும், பொதுமக்களும் மகிழ்ச்சி அடைந்தனர். மேலும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் விவசாய பணிகள் மும்முரமாக நடைபெற்று கொண்டிருக்கிறது. 6 ஏரிகளில் 71 முதல் 80 சதவீதம் வரை தண்ணீர் நிரம்பியுள்ளது. 7 ஏரிகளில் 51 முதல் 70 சதவீதம் வரை தண்ணீர் நிரம்பியுள்ளது. 13 ஏரிகளில் 26 முதல் 50 சதவீதம் வரை நிரம்பியுள்ளது. 17 ஏரிகளில் 1 முதல் 25 சதவீதம் வரை நிரம்பியுள்ளது. ஏற்கனவே ஆலத்தூர் தாலுகாவில் உள்ள கொட்டரை மருதையாறு நீர்த்தேக்கம் நிரம்பி வழிகிறது. வேப்பந்தட்டை தாலுகாவில் உள்ள விசுவக்குடி அணை பாதிக்கு மேல் நிரம்பியுள்ளது. மேலும் மாவட்டத்தில் உள்ள அருவிகள் சிலவற்றில் தண்ணீர் கொட்டி வருகிறது.


Next Story