மது விற்ற 7 பேர் கைது


மது விற்ற 7 பேர் கைது
x
தினத்தந்தி 18 Jan 2023 12:45 AM IST (Updated: 18 Jan 2023 12:45 AM IST)
t-max-icont-min-icon

நீடாமங்கலம், முத்துப்பேட்டை பகுதியில் மது விற்ற 7 பேர் கைது செய்யப்பட்டனர்.

திருவாரூர்

நீடாமங்கலம், முத்துப்பேட்டை பகுதியில் மது விற்ற 7 பேர் கைது செய்யப்பட்டனர்.

நீடாமங்கலம்

திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவப்பிரகாசம் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது நகர் பகுதியில் மது விற்பனை செய்த நகர் மேலத்தெருவை சேர்ந்த ரவி (வயது35), கோவில்வெண்ணி அம்பேத்கர் தெருவை சேர்ந்த விமல்ராஜ் (27) ஆகிய 2 பேரை கைது செய்தனர்.

இதேபோல் நீடாமங்கலம் ரெயில் நிலைய வளாகத்தில் உள்ள கழிவறை பகுதியில் மது விற்பனை செய்த கோரையாறு லைன்கரை தெருவை சேர்ந்த சதீஷ்குமார் (43), நீடாமங்கலம் மோதிலால் நேரு தெருவை சேர்ந்த சரவணன் (55) ஆகிய 2 பேரையும் போலீசார் மடக்கிப்பிடித்து கைது செய்தனர். கைதான 4 பேரிடமிருந்து 40 மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

முத்துப்பேட்டை

முத்துப்பேட்டை பகுதியில் திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு நேற்று முன்தினம் அனைத்து டாஸ்மாக் மதுக்கடைகளுக்கும் விடுமுறை விட்டப்பட்டது. இதனை சாதகமாக பயன்படுத்திக்கொண்ட சிலர் முன்கூட்டியே டாஸ்மாக் கடைகளில் மதுபாட்டில்களை வாங்கி பதுக்கி வைத்துக்கொண்டு அதை கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இதனையடுத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜேஷ் தலைமையில் போலீசார் பல்வேறு இடங்களில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது முத்துப்பேட்டை அருகே உள்ள பேட்டை பகுதியை சேர்ந்த மந்திரமூர்த்தி (61), தில்லைவிளாகம் கழுவங்காடு பகுதியை சேர்ந்த சரவணன் (36), விளாங்காடு கீழத்தெருவை சேர்ந்த பரத்குமார் (21) ஆகிய 3 பேர் மது பாட்டில்களை விற்றது தெரியவந்தது. இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து 3 பேரையும் கைது செய்தனர்.


Next Story