600 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்


600 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்
x
தினத்தந்தி 1 July 2023 12:15 AM IST (Updated: 1 July 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

ஆட்டோவில் கடத்திய 600 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.

கன்னியாகுமரி

நாகர்கோவில்:

ஆட்டோவில் கடத்திய 600 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.

நாகர்கோவில் ஒழுகினசேரி அருகில் உள்ள அப்டா மார்க்கெட் பகுதியில் அகஸ்தீஸ்வரம் வட்ட வழங்கல் அதிகாரி அனில்குமார், தனி வருவாய் ஆய்வாளர் நிவாஸ்கர் மற்றும் ஊழியர்கள் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக அதிவேகமாக வந்த ஆட்டோவை நிறுத்துமாறு சைகை காண்பித்தும் நிற்காமல் சென்றது. இதையடுத்து வட்ட வழங்கல் அதிகாரி தலைமையிலான ஊழியர்கள் ஆட்டோவை விரட்டி சென்றனர். இதையறிந்த ஆட்டோ டிரைவர் நாகராஜகோவில் பகுதியில் வாகனத்தை நிறுத்தி விட்டு தப்பியோடிவிட்டார். ஆட்டோவை சோதனை செய்தபோது அதில் சுமார் 22 பிளாஸ்டிக் பைகளில் 600 கிலோ ரேஷன் அரிசி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து ஆட்டோவை கைப்பற்றி அகஸ்தீஸ்வரம் வட்ட வழங்கல் அலுவலக வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அதில் இருந்த 600 கிலோ ரேஷன் அரிசி கோணம் தமிழ்நாடு அரசு நுகர்பொருள் வாணிபக்கழக கிடங்கில் ஒப்படைக்கப்பட்டது. மேலும் ஆட்டோ உரிமையாளர் யார்? அரிசியை கடத்தியது ஆட்டோ உரிமையாளரா? அல்லது வேறு நபரா? என்பது குறித்து அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.


Next Story