600 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்
600 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்
கன்னியாகுமரி
களியக்காவிளை:
விளவங்கோடு வட்ட வழங்கல் அதிகாரி ராஜசேகர் தலைமையில் வருவாய் ஆய்வாளர் ரதன் ராஜ்குமார் ஆகியோர் கொண்ட குழுவினர் படந்தாலுமூடு பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த பகுதியில் உள்ள சந்தையின் அருகில் சிறு சிறு மூடைகளில் 600 கிலோ ரேஷன் அரிசி மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. விசாரணையில் ரேஷன் அரிசியை கேரளாவுக்கு கடத்திச் செல்ல மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து அதிகாரிகள் அரிசியை பறிமுதல் செய்து காப்புகாடு அரசு குடோனில் ஒப்படைத்தனர். மேலும், அரசியை அங்கு பதுக்கி வைத்தவர் யார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Related Tags :
Next Story