வடமதுரை அருகே பணம் வைத்து சூதாடிய 6 பேர் கைது


வடமதுரை அருகே பணம் வைத்து சூதாடிய 6 பேர் கைது
x
தினத்தந்தி 4 Jun 2023 2:45 AM IST (Updated: 4 Jun 2023 2:45 AM IST)
t-max-icont-min-icon

வடமதுரை அருகே பணம் வைத்து சூதாடிய 6 பேர் கைது செய்யப்பட்டனர்.

திண்டுக்கல்

வடமதுரை அருகே கொல்லப்பட்டி பிரிவு பகுதியில் சூதாட்டம் நடைபெறுவதாக வேடசந்தூர் போலீஸ் துணை சூப்பிரண்டு துர்காதேவிக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அவரது உத்தரவின்பேரில் வடமதுரை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கிருஷ்ணவேணி தலைமையிலான போலீசார் நேற்று முன்தினம் அப்பகுதியில் ரோந்து சென்றனர்.

அப்போது அங்குள்ள மனமகிழ் மன்றத்தில், ரெட்டியபட்டியை சேர்ந்த பாண்டி (வயது 46), பெரும்புள்ளியை சேர்ந்த பிரபாகரன் (34), ஏ.வி.பட்டியை சேர்ந்த சக்திவேல் (36), செங்குளத்துப்பட்டியை சேர்ந்த பாலமுருகன் (30), அய்யலூரை சேர்ந்த சின்னாத்தேவர் (60), வடமதுரையை சேர்ந்த சித்திரைவேல் (32) ஆகியோர் பணம் வைத்து சூதாடியது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 6 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து ரூ.6 ஆயிரத்து 100 மற்றும் சீட்டுக்கட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது.


Next Story