பணம் வைத்து சூதாடிய 6 பேர் கைது
புதுக்கோட்டையில் பணம் வைத்து சூதாடிய 6 பேர் கைது செய்யப்பட்டனர்.
தூத்துக்குடி
தூத்துக்குடி அருகே உள்ள புதுக்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் வின்சென்ட் அன்பரசி, சப்-இன்ஸ்பெக்டர் ராஜபிரபு ஆகியோர் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர்.
அப்போது, புதுக்கோட்டை அருகே உள்ள மறவன்மடம் பகுதியில் பணம் வைத்து சூதாடிக் கொண்டு இருந்ததாக ரவி (வயது 58), நாகராஜ் (30), வெள்ளத்துரை (41), பிரசாத் (38), மாரிமுத்து (36), சாலமன் தாமஸ் (55) ஆகிய 6 பேரையும் போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.40 ஆயிரத்து 975 ரொக்கப்பணத்தையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
இது தொடர்பாக புதுக்கோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story