காஞ்சீபுரம் மாவட்டத்தில் 56 ஏரிகள் நிரம்பின


காஞ்சீபுரம் மாவட்டத்தில் 56 ஏரிகள் நிரம்பின
x

காஞ்சீபுரம் மாவட்டத்தில் 56 ஏரிகள் நிரம்பியதாக பொதுப்பணித்துறையினர் தெரிவித்தனர்.

வாலாஜாபாத்,

காஞ்சீபுரத்தை தலைமையிடமாக கொண்ட பாலாறு உபவடி நிலக் கோட்ட பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள காஞ்சீபுரம், செங்கல்பட்டு, சென்னை, திருவண்ணாமலை, திருவள்ளூர் மாவட்டங்களில் உள்ள 1022 ஏரிகளில் 210 ஏரிகள் முழு கொள்ளளவையும், 259 ஏரிகள் 75 சதவீதத்துக்கு மேலும், 238 ஏரிகள் 50 சதவீதத்துக்கு மேலும், 227 ஏரிகள் 25 சதவீதக்கும் மேலும் நிறைந்துள்ளது.

88 ஏரிகளுக்கு மழைநீர் வந்து கொண்டிருப்பதாக பொதுப்பணி துறையினர் தெரிவித்துள்ளனர்.

56 ஏரிகள் நிரம்பின

இதில் காஞ்சீபுரம் மாவட்டத்தில் உள்ள 381 ஏரிகளில் தொடர் மழை காரணமாக 56 ஏரிகள் முழு கொள்ளளவை எட்டியுள்ளது. 36 ஏரிகள் 75 சதவீதத்திற்கும் மேலும், 61 ஏரிகள் 50 சதவீதத்தை தாண்டியும், 171 ஏரிகள் 25 சதவீதத்திற்கு மேலும் நீர் நிரம்பி உள்ளன. 57 ஏரிகளுக்கு மழைநீர் வந்து கொண்டிருக்கிறது.

இதேபோல் செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள 528 ஏரிகளில் 137 ஏரிகள் முழு கொள்ளளவையும், 194 ஏரிகள் 75 சதவீதத்தையும், 132 ஏரிகள் 50 சதவீதத்திற்கு மேலும், 52 ஏரிகளில் 25 சதவீதமும், நீர் நிரம்பி உள்ளதாகவும், 13 ஏரிகளுக்கு மழைநீர் வந்து கொண்டிருப்பதாகவும் பொதுப்பணி துறையினர் தெரிவித்துள்ளனர்.


Next Story