50 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள் சாய்ந்தன


50 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள் சாய்ந்தன
x

50 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள் சாய்ந்தன

நாகப்பட்டினம்

நாகை செல்லூர், பலையூர், சிக்கல், கீழையூர், காரப்பிடாகை உள்ளிட்ட பகுதிகளில் 50 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள் சாய்ந்தன. இந்த தொடர் மழை காரணமாக வயலில் தண்ணீர் தேங்கி உள்ளதால் எந்திரங்களை கொண்டு அறுவடை செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் வயல்களில் தெளித்திருந்த உளுந்து, பச்சை பயிர்களும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த மழையானது தொடர்ந்து பெய்தால் பயிர் அழுகிவிடும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனையுடன் தெரிவித்தனர்.

நாகையில் நேற்று பெய்த கன மழையால் புதிய பஸ் நிலையம் குளம் போல காட்சியளித்தது. பப்ளிக் ஆபீஸ் ரோடு, வ.உ.சி. சாலை உள்ளிட்ட நகரின் முக்கிய பகுதிகள் வெள்ளக்காடாக காட்சியளித்தன. சாலையில் ஆறாக ஓடிய மழை நீரில் வாகனங்கள் சிரமப்பட்டு சென்றன. மேலும் கல்லுக்கார தெரு குடியிருப்பை மழை நீர் சூழ்ந்தது.


Next Story