ஆந்திராவுக்கு கடத்திய 5 டன் ரேஷன் அரிசி மினி லாரியுடன் பறிமுதல்


ஆந்திராவுக்கு கடத்திய 5 டன் ரேஷன் அரிசி மினி லாரியுடன் பறிமுதல்
x

நாட்டறம்பள்ளி அருகே ஆந்திராவுக்கு கடத்திய 5 டன் ரேஷன் அரிசி, மினி லாரியுடன் பறிமுதல் செய்யப்பட்டது.

திருப்பத்தூர்

நாட்டறம்பள்ளி அருகே ஆந்திராவுக்கு கடத்திய 5 டன் ரேஷன் அரிசி, மினி லாரியுடன் பறிமுதல் செய்யப்பட்டது.

வாகன சோதனை

திருப்பத்தூர் மாவட்டம் நாட்டறம்பள்ளி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் இருந்து குறைந்த விலையில் ரேஷன் அரிசிகளை வாங்கி அதனை அதிக லாபத்திற்கு விற்பனை செய்ய ஆந்திர மாநிலத்திற்கு பச்சூர் வழியாக கடத்தப்படுவதாக நாட்டறம்பள்ளி தாசில்தார் க.குமாருக்கு தகவல் கிடைத்தது.

அதன்பேரில் பச்சூரிலிருந்து ஆந்திர மாநிலம் குப்பம் செல்லும் சாலையில் தாசில்தார் குமார் தலைமையில், வட்ட வழங்கல் அலுவலர் சுதாகர், கிராம நிர்வாக அலுவலர்கள் சரவணன், சசிகுமார் ஆகியோர் அடங்கிய வருவாய்த்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

5 டன் ரேஷன் அரிசி பறிமுதல்

அப்போது பச்சூர் பஜார் பகுதி வழியாக வந்த மினி லாரியை தடுத்து நிறுத்திய போது மினி லாரியை நிறுத்தி விட்டு, டிரைவர் தப்பி ஓடினார். இதனால் சந்தேகமடைந்த அதிகாரிகள் மினி லாரியை சோதனை செய்தபோது அதில் சுமார் 5 டன் ரேஷன் அரிசி இருப்பது தெரியவந்தது.

அதைத்தொடர்ந்து ரேஷன் அரிசி மூட்டைகளுடன் மினி லாரியை பறிமுதல் செய்து வாணியம்பாடி நுகர் பொருள் வாணிப கிடங்கில் ஒப்படைத்தனர். மேலும் தப்பி ஓடியடிரைவர் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story