சீட்டு விளையாடிய 5 பேர் கைது


சீட்டு விளையாடிய 5 பேர் கைது
x
தினத்தந்தி 1 May 2023 12:30 AM IST (Updated: 1 May 2023 12:31 AM IST)
t-max-icont-min-icon

சீட்டு விளையாடிய 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

தூத்துக்குடி

தட்டார்மடம்:

சாத்தான்குளம் போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்து, சப்-இன்ஸ்பெக்டர் ரவிக்குமார் தலைமையிலான தனிப்படை போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது, சாத்தான்குளம் கொம்பன்குளம் பகுதியில் உள்ள ஒரு தோட்டத்தின் அருகில் கொம்பன்குளத்தை சேர்ந்த அம்மமுத்து (வயது 48), முத்து (54), தூத்துக்குடி முத்தையாபுரத்தை சேர்ந்த சத்தியராஜ் (31), பாளையங்கோட்டை பகுதியை சேர்ந்த கண்ணன் (37), நெல்லை பாரதியார் தெருவை சேர்ந்த ராஜா (41) ஆகியோர் பணம் வைத்து சீட்டு விளையாடி சூதாட்டத்தில் ஈடுபட்டது தெரியவந்தது.

இதனையடுத்து 5 பேரையும் போலீசார் கைது செய்து, ரூ.2.59 லட்சம், சீட்டுக்கட்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.


Next Story