தொழிலாளியை தாக்கிய 5 பேர் கைது


தொழிலாளியை தாக்கிய 5 பேர் கைது
x

நெல்லை அருகே தொழிலாளியை தாக்கிய 5 பேரை போலீசார் கைது செய்தனர்.

திருநெல்வேலி

நெல்லை அருகே கங்கைகொண்டான் வெங்கடாசலபுரம் நடுத்தெருவை சேர்ந்தவர் நாராயணன் (வயது 33). தொழிலாளி. இவர் வெங்கடாசலபுரம் குத்தாலபேரி பகுதியில் வந்தபோது அதே பகுதியை சேர்ந்த முண்டசாமி (23), பூல் பாண்டி (30), முருகப்பெருமாள் என்ற முருகன் (48), உலகன் (45), உலகநாதன் (25) ஆகியோர் சேர்ந்து நாராயணனை கல்லால் தாக்கினர். அதனை தடுக்க வந்த அவரின் பெரியப்பாவான சுப்பையா என்பவரையும் தாக்கியுள்ளனர். இதுகுறித்த புகாரின் பேரில் கங்கைகொண்டான் போலீசார் 5 பேரையும் கைது செய்தனர்.


Next Story