5½ கிலோ எடையில் அன்னாசி பழம்


5½ கிலோ எடையில் அன்னாசி பழம்
x

5½ கிலோ எடையில் அன்னாசி பழம்

கன்னியாகுமரி

திருவட்டார்:

திருவட்டார் அருகே உள்ள அருவிக்கரை மாத்தூர் பகுதியை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன் (வயது48), முன்னாள் ராணுவ வீரர். இவர் அருமனையில் அன்னாசி பயிரிட்டு வருகிறார். வழக்கமாக தரமான அன்னாசி பழம் ¾ கிலோ முதல் 2¼ கிலோ கொண்டதாக இருக்கும். ஆனால், ராதாகிருஷ்ணன் தோட்டத்தில் விளைந்த ஒரு அன்னாசி பழம் 5.400 கிலோ எடை இருந்தது. இதனால் விவசாயி மகிழ்ச்சி அடைந்தார். மேலும் இந்த அதிசய அன்னாசியை பலரும் வியப்புடன் பார்த்து செல்கின்றனர்.


Next Story