தென்னை வணிக வளாகத்தில் ரூ.5¼ கோடியில் நவீன எந்திரங்கள்


தென்னை வணிக வளாகத்தில் ரூ.5¼ கோடியில் நவீன எந்திரங்கள்
x

தென்னை வணிக வளாகத்தில் ரூ.5¼ கோடியில் மதிப்புக்கூட்டுப்பொருட்கள் உற்பத்தி செய்யும் நவீன எந்திரங்கள் நிறுவப்பட்டுள்ளதை வேளாண் விற்பனை மற்றும் வணிகத்துறை இயக்குனர் நடராஜன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

தஞ்சாவூர்

தென்னை வணிக வளாகத்தில் ரூ.5¼ கோடியில் மதிப்புக்கூட்டுப்பொருட்கள் உற்பத்தி செய்யும் நவீன எந்திரங்கள் நிறுவப்பட்டுள்ளதை வேளாண் விற்பனை மற்றும் வணிகத்துறை இயக்குனர் நடராஜன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

தென்னை வணிக வளாகம்

தஞ்சை வேளாண்மை விற்பனைக்குழு சார்பில் பட்டுக்கோட்டை தென்னை வணிக வளாகம் செயல்பட்டு வருகிறது. இங்கு ரூ.5.20 கோடி மதிப்பீட்டில் தேங்காய் பால் உற்பத்தி அலகு மற்றும் தென்னை மதிப்பு கூட்டுப் பொருட்கள் உற்பத்தி செய்யும் அலகுகள் அமைக்கும் பணிகள் தொடர்பாக நவீன தளவாடங்கள் நிறுவப்பட்டு சோதனை ஓட்டம் நிறைவு பெற்றுள்ளது.

இந்நிலையில் வேளாண்மை விற்பனை மற்றும் வணிகத்துறை இயக்குனர் நடராஜன் பட்டுக்கோட்டை தென்னை வணிக வளாகத்தில் அமைந்துள்ள தளவாட எந்திரங்கள் குறித்தும் அதன் உற்பத்தி திறன் குறித்தும் ஆய்வு செய்தார். தென்னை வணிக வளாக மேம்பாட்டிற்காக ரூ.2.40 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டு வரும் 500 டன் கொள்ளளவு கொண்ட சேமிப்புக் கிடங்கு, சாலை விரிவாக்கப் பணிகள், சுற்று வேலி மற்றும் நுழைவு வாயில் பணிகள் குறித்தும் ஆய்வு மேற்கொண்டார்.

2,700 டன் நிறைவு

இதனைத்தொடர்ந்து பட்டுக்கோட்டை ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் கொப்பரை கொள்முதல் பணிகள், கிடங்குகள் பயன்பாடு, மின்னணு தேசிய வேளாண் சந்தை, பண்ணை வாயில், கொள்முதல் பணிகள், ஆகியவற்றைக் குறித்தும் அவர் ஆய்வு மேற்கொண்டார். பட்டுக்கோட்டை ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் கொப்பரை கொள்முதல் இலக்கான 2700 டன் நிறைவடைந்ததையும், 1,894 விவசாயிகள் இதன் மூலம் பயன் அடைந்த விபரங்களையும் ஆய்வு செய்தார்.

இந்த ஆய்வின்போது தஞ்சை விற்பனைக்குழு செயலாளர், தமிழ்நாடு மாநில வேளாண்மை விற்பனை வாரிய செயற்பொறியாளர், உதவி செயற்பொறியாளர், உதவி பொறியாளர், பட்டுக்கோட்டை விற்பனைக் கூட கண்காணிப்பாளர் மற்றும் அலுவலர்கள் உடன் இருந்தனர்.


Next Story