4,690 பேர் கிராம உதவியாளர் பணிக்கான தேர்வு எழுதினர்


4,690 பேர் கிராம உதவியாளர் பணிக்கான தேர்வு எழுதினர்
x

ராணிப்பேட்டை மாவட்டத்தில் நடைபெற்ற கிராம உதவியாளர் பணிக்கான தேர்வை 4,690 பேர் எழுதினர். 2,416 பேர் பங்கேற்கவில்லை.

ராணிப்பேட்டை

ராணிப்பேட்டை மாவட்டத்தில் நடைபெற்ற கிராம உதவியாளர் பணிக்கான தேர்வை 4,690 பேர் எழுதினர். 2,416 பேர் பங்கேற்கவில்லை.

4,690 பேர் எழுதினர்

ராணிப்பேட்டை மாவட்டத்தில் கிராம உதவியாளர் பணிக்கான தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வை எழுத மாவட்டம் முழுவதிலும் இருந்து 7,106 பேர் விண்ணப்பித்திருந்தனர். அவர்கள் தேர்வு எழுத வாலாஜா, அரக்கோணம், ஆற்காடு, கலவை,நெமிலி, சோளிங்கர் உள்ளிட்ட பகுதிகளில் தேர்வு மையங்கள் ஏற்படுத்தப்பட்டிருந்தது.

காலை 10 மணிக்கு தேர்வு தொடங்கியது. இதனால் காலை 8 மணி முதலே தேர்வர்கள் வரத்தொடங்கினர். அவர்கள் தீவிர சோதனைக்கு பின்னர் தேர்வு மையங்களுக்குள் அனுமதிக்கப்பட்டனர். தேர்வு எழுத விண்ணப்பித்திருந்த 7,106 பேரில் 4,690 பேர் மட்டுமே தேர்வு எழுதினர். 2,416 பேர் தேர்வு எழுதவில்லை.

கலெக்டர் பார்வையிட்டார்

வாலாஜா அறிஞர் அண்ணா மகளிர் கலைக் கல்லூரி, ஆற்காடு ராமகிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி ஆகிய மையங்களில் நடந்த தேர்வை கலெக்டர் பாஸ்கர பாண்டியன் பார்வையிட்டார். கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) சுரேஷ், வருவாய் கோட்டாட்சியர் வினோத் குமார், தாசில்தார்கள் நடராஜன், சுரேஷ் ஆகியோரும் தேர்வு மையங்களை பார்வையிட்டனர்.

இந்த தேர்வில் 5-ம் வகுப்பு பாடத்தில்‌ இருந்து கேள்விகள் கேட்கப்பட்டிருந்ததாக தேர்வர்கள் தெரிவித்தனர்.


Next Story