குரூப்-4 தேர்வை 41,307 பேர் எழுதுகின்றனர்


குரூப்-4 தேர்வை 41,307 பேர் எழுதுகின்றனர்
x

வேலூர் மாவட்டத்தில் குரூப்-4 தேர்வை 41,307 பேர் எழுதுகின்றனர்

வேலூர்

தமிழகம் முழுவதும் டி.என்.பி.எஸ்.சி. குரூப்-4 தேர்வு வருகிற 24-ந் தேதி அன்று நடக்கிறது. இந்த தேர்வை எழுத லட்சக்கணக்கானவர்கள் விண்ணப்பித்துள்ளனர். தேர்வர்கள் ஹால் டிக்கெட் பதிவிறக்கம் செய்து கொள்ள தெரிவிக்கப்பட்டுள்ளது.

வேலூர் மாவட்டத்தில் 41 ஆயிரத்து 307 பேர் தேர்வு எழுத விண்ணப்பித்துள்ளனர். மாவட்டத்தில் உள்ள 6 தாலுகாக்ககளில் 142 தேர்வு கூடங்களில் தேர்வு நடக்கிறது. இதற்கான முன்னேற்பாடுகள் குறித்த ஆலோசனை கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. கலெக்டர் குமாரவேல்பாண்டியன் தலைமை தாங்கினார். இதில் மாவட்ட வருவாய் அலுவலர் ராமமூர்த்தி மற்றும் பலர் கலந்து கொண்டனர். பல்வேறு ஆலோசனைகள் மற்றும் அறிவுரைகளை அதிகாரிகளுக்கு கலெக்டர் வழங்கினார்.


Next Story