400 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்
400 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்
அழகியபாண்டியபுரம்:
பூதப்பாண்டி அருகே உள்ள சாட்டுப்புதூர் பகுதியில் செந்தில்குமார் என்பவரது வீட்டில் ரேஷன் அரிசி பதுக்கிவைத்திருப்பதாக உணவு பாதுகாப்பு துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து உணவு பாதுகாப்பு துறை அதிகாரி இசக்கி ஜெகதம்பாள் இதுபற்றி பூதப்பாண்டி போலீசாருக்கு தெரிவித்தார். அதன்பேரில் பூதப்பாண்டி சப்-இன்ஸ்பெக்டர் சுந்தர்சிங், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் பீட்டர், சந்திரசேகர் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று செந்தில்குமாரின் வீட்டில் சோதனை நடத்தினர். அங்கு 400 கிலோ ரேஷன் அரிசி 8 மூடைகளில் பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து ரேஷன் அரிசி மூடைகளை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக போலீசார் செந்தில்குமாரை கைது செய்தனர்.
Related Tags :
Next Story