கஞ்சா விற்ற 4 வாலிபர்கள் கைது


கஞ்சா விற்ற 4 வாலிபர்கள் கைது
x
தினத்தந்தி 30 Jan 2023 12:15 AM IST (Updated: 30 Jan 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

கஞ்சா விற்ற 4 வாலிபர்கள் கைது

கன்னியாகுமரி

திங்கள்சந்தை:

இரணியல் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜோதி தனிஸ்லாஸ் மற்றும் போலீசார் கீழகட்டிமாங்கோடு பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு சந்தேகத்துக்கிடமாக நின்று கொண்டிருந்த 4 வாலிபர்களை பிடித்து ேசாதனையிட்டனர். அவர்களிடம் ½ கிலோ கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. விசாரணையில் அவர்கள் அதே பகுதியை சேர்ந்த ஜெரின் (வயது21), ஜெரிஷ் (21), டேவிட் (22), முகமது அப்சல் (22) என்பதும், கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவர்களை கைது செய்து அவர்களிடம் இருந்த ½ கிலோ கஞ்சா, ஒரு மோட்டார் சைக்கிள், 2 கார் மற்றும் 4 செல்போன் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.


Next Story