கஞ்சா விற்ற 4 வாலிபர்கள் கைது


தினத்தந்தி 23 Jan 2023 12:15 AM IST (Updated: 23 Jan 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

நாலாட்டின்புத்தூர் அருகே கஞ்சா விற்ற 4 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.

தூத்துக்குடி

நாலாட்டின்புத்தூர்:

நாலாட்டின்புத்தூர் அருகே கஞ்சாவை பதுக்கி விற்ற 4 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.

போலீசார் ரோந்து

நாலாட்டின்புத்தூர் அருகே உள்ள சத்திரப்பட்டி பஸ் ஸ்டாப் பகுதிகளில் சிலர் கஞ்சாவை பதுக்கிவைத்து விற்பனை செய்வதாக நாலாட்டின்புத்தூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் நாலாட்டின்புத்தூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஆர்தர்ஜஸ்டின் மற்றும் போலீசார் சத்திரப்பட்டி பஸ் ஸ்டாப் பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அப்பகுதியில் சந்தேகத்திற்கு இடமான முறையில் நின்றுகொண்டிருந்த 4 பேர் போலீசாரை பார்த்தவுடன் தப்பி ஓட முயன்றனர்.

4 வாலிபர்கள் சிக்கினர்

அந்த 4 பேரையும் போலீசார் சுற்றுவளைத்து பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர்கள் இடைசெவல் காலணி பகுதியை சேர்ந்த பாலசுப்பிரமணியன் மகன் பிரவீன்குமார் (வயது 23), சத்திரப்பட்டி காலணி தெருவை சேர்ந்த சுரேஷ்குமார் மகன் தினேஷ்குமார் (19), அதே பகுதியை சேர்ந்த தங்கச்சாமி மகன் சின்னராஜ் (23), முத்துபாண்டி மகன் சிவா (24) ஆகிய 4 பேர் எனவும், அந்த பகுயில் கஞ்சா பொட்டலங்களை பதுக்கி வைத்து விற்று வந்ததும் தெரியவந்தது. அவர்கள் விற்பனைக்காக வைத்திருந்த கஞ்சா பொட்டலங்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

இதுதொடர்பாக நாலாட்டின்புத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த 4 பேரையும் கைது செய்தனர்.


Next Story