கிராம உதவியாளர் பணிக்கான தேர்வை 4 ஆயிரத்து 556 பேர் எழுதினர்


கிராம உதவியாளர் பணிக்கான தேர்வை 4 ஆயிரத்து 556 பேர் எழுதினர்
x

கிராம உதவியாளர் பணிக்கான தேர்வை 4 ஆயிரத்து 556 பேர் எழுதினர்.

புதுக்கோட்டை

புதுக்கோட்டை மாவட்ட வருவாய் அலகில் காலியாகஉள்ள 70 கிராம உதவியாளர் காலிப்பணியிடங்களை நிரப்ப எழுத்து தேர்வு நேற்று நடைபெற்றது. இத்தேர்வை எழுத விண்ணப்பித்திருந்த 6 ஆயிரத்து 284 பேருக்கு அழைப்பு கடிதம் அனுப்பப்பட்டிருந்தன. தேர்வர்கள் நேற்று காலையில் தேர்வு மையங்களின் முன்பு குவிந்தனர். தேர்வர்களை பலத்த சோதனைக்கு பின் தேர்வு மையங்களுக்குள் அனுமதித்தனர். செல்போன் உள்பட எலக்ட்ரானிக் பொருட்கள் கொண்டு செல்ல அனுமதிக்கப்படவில்லை. மாவட்டத்தில் 10-க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்ற இத்தேர்வை 4 ஆயிரத்து 556 பேர் எழுதினர். 1,728 பேர் தேர்வு எழுத வரவில்லை. தேர்வு நடைபெற்றதை வருவாய்த்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.

ஆவுடையார்கோவில் தாலுகாவில் அமரடக்கி, கீழ்குடி வாட்டாத்தூர், மாகாளியேந்தல் மற்றும் ஏம்பல் ஆகிய கிராம வருவாய் வட்டங்களுக்கு கிராம உதவியாளர் பணிக்கான எழுத்து தேர்வு நடைபெற்றது.


Next Story