புகையிலை பொருட்கள் விற்ற 4 கடைகளுக்கு `சீல்'


புகையிலை பொருட்கள் விற்ற 4 கடைகளுக்கு `சீல்
x

புகையிலை பொருட்கள் விற்ற 4 கடைகளுக்கு `சீல்' வைக்கப்பட்டது.

திருச்சி

திருச்சி தெப்பக்குளம் பகுதியில் உள்ள ஸ்ரீ ரஜினி ஸ்டோர், எஸ்.ஆர்.சி. ரோடு பகுதியில் உள்ள ராஜா ஸ்ேடார், இ.பி.ரோடு பகுதியில் உள்ள வி.கே.என். டீ ஸ்டால் மற்றும் தென்னூர் பகுதியில் உள்ள கே.பி.டீ ஸ்டால் ஆகிய கடைகளில் உணவு பாதுகாப்புதுறை அதிகாரிகள் சோதனை செய்தனர்.

அப்போது அந்த கடைகளில் அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து புகையிலை பொருட்களை பறிமுதல் செய்து தலா ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. கடந்த 22-ந்தேதி அந்த கடைகளில் சோதனை செய்த போது மீண்டும் புகையிலை விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் தலா ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டு நேற்று அந்த கடைகளுக்கு `சீல்' வைக்கப்பட்டது.


Next Story