மோட்டார் சைக்கிள் மீது கார் மோதல்; 4 பேர் படுகாயம்
சூளகிரி அருகே மோட்டார் சைக்கிள் மீது கார் மோதல்; 4 பேர் படுகாயம் அடைந்தனர்.
சூளகிரி
கிருஷ்ணகிரி மாவட்டம் பேரிகையில் இருந்து சூளகிரி நோக்கி நேற்று மாலை கார் ஒன்று சென்றது. பின்டகானபள்ளி என்ற இடத்தில் சென்றபோது அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிள் மீது கார்மோதியது. இந்த விபத்தில் காரில் வந்த 2 பேர் மற்றும் மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் என 4 பேர் படுகாயம் அடைந்தனர். இவர்களை அக்கம் பக்கத்தினர் மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அவர்களது பெயர் விவரம் தெரியவில்லை. இந்த விபத்து குறித்து சூளகிரி போலீசார் விசாரணை நடதத்ி வருகிறார்கள்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire