திண்டுக்கல்லில் 300 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்


திண்டுக்கல்லில் 300 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்
x

திண்டுக்கல்லில் கடைகளில் விற்பனைக்கு வைத்திருந்த 300 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

திண்டுக்கல்

திண்டுக்கல் மாநகராட்சி பகுதியில் அரசு தடை செய்த பாலித்தீன் பைகள், பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனையை தடுக்க அவ்வப்போது சோதனை நடத்தப்படுகிறது. இந்த நிலையில் இன்று நகர்நல அலுவலர் இந்திரா தலைமையில் சுகாதார ஆய்வாளர் சுரேஷ்குமார் மற்றும் அதிகாரிகள் மேற்குரதவீதி, தாலுகா அலுவலக சாலை, பழனி சாலை உள்ளிட்ட பகுதிகளில் 20-க்கும் மேற்பட்ட கடைகளில் திடீர் சோதனை நடத்தினர்.

மேலும் ஒரு மொத்த விற்பனை கடையின் குடோனிலும் சோதனை செய்தனர். அப்போது கடைகள், குடோனில் தடை செய்யப்பட்ட பாலித்தீன் பைகள், பிளாஸ்டிக் டம்ளர், தட்டுகளை விற்பனைக்கு வைத்து இருந்ததை அதிகாரிகள் கண்டுபிடித்தனர். இதையடுத்து கடைகள், குடோனில் இருந்த 300 கிலோ பாலித்தீன் பைகள், பிளாஸ்டிக் டம்ளர், தட்டுகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை விற்பனை செய்யக்கூடாது என்று அதிகாரிகள் கடுமையாக எச்சரித்தனர்.


Next Story