சரக்கு வாகனம் மோதி 3 வயது குழந்தை - தாய் சாவு


சரக்கு வாகனம் மோதி 3 வயது குழந்தை - தாய் சாவு
x

திருச்சி அருகே சரக்கு வாகனம் மோதி தாயும், அவருடைய 3 வயது குழந்தையும் பலியானார்கள்.

திருச்சி

திருச்சி அருகே சரக்கு வாகனம் மோதி தாயும், அவருடைய 3 வயது குழந்தையும் பலியானார்கள்.

தாய், 3 வயது குழந்தை சாவு

திருச்சி அருகே முத்தரசநல்லூர் தேவானந்த நகர் பகுதியை சேர்ந்தவர் கண்ணதாசன். இவரது மனைவி காயத்ரி (வயது 28). இந்த தம்பதிக்கு யாஷிகா (3) என்ற மகள் இருந்தாள். நேற்று காயத்ரி வீட்டுக்கு கம்பரசம்பேட்டை பகுதியை சேர்ந்த அவரது தோழி வெண்ணிலா வந்து இருந்தார்.

இதைத்தொடர்ந்து வெண்ணிலாவை மீண்டும் அவரது வீட்டுக்கு அனுப்பிவைப்பதற்காக காயத்ரி அவரை ஸ்கூட்டரில் அருகே உள்ள பஸ் நிறுத்தத்துக்கு அழைத்து சென்றார். அவர்களுடன் யாஷிகாவும் சென்றார்.

முத்தரசநல்லூர் ரெயில்வே கேட் அருகே திருச்சி - கரூர் பைபாஸ் சாலையை கடந்து சென்றபோது, அந்த வழியாக வந்த சரக்கு வாகனம் அவர்கள் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது. இதில் ஸ்கூட்டரில் இருந்த 3 பேருமே கீழே விழுந்து பலத்த காயம் அடைந்தனர்.

இதனை கண்ட அக்கம்பக்கத்தினர் அவர்களை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு காயத்ரி, யாஷிகா ஆகியோர் பரிதாபமாக இறந்தனர். வெண்ணிலா மேல் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

டிரைவர் கைது

இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த ஜீயபுரம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ஸ்கூட்டரில் மோதிவிட்டு சென்ற சரக்கு வாகனத்தை விரட்டி சென்று பிடித்தனர். இது தொடர்பாக ஜீயபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து சரக்கு வாகனத்தை ஓட்டி வந்த நாமக்கல்லை சேர்ந்த விஜய் (23) என்பவரை கைது செய்தனர்.


Related Tags :
Next Story