மண் கடத்திய 3 பேர் கைது


மண் கடத்திய 3 பேர் கைது
x

நெல்லை அருகே மண் கடத்திய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

திருநெல்வேலி

நெல்லை அருகே தாழையூத்து தெற்கு மலை பகுதியில் சிலர் அனுமதியின்றி மண் அள்ளி கடத்துவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து தாழையூத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சங்கர் தலைமையில் போலீசார் அங்கு விரைந்து சென்றனர். போலீசாரை கண்டதும், அந்த பகுதியில் மண் அள்ளிக் கொண்டிருந்த 6 பேர் தப்பி ஓட முயன்றனர்.

போலீசார் அவர்களை துரத்திச் சென்று 3 பேரை பிடித்தனர். அவர்கள் தச்சநல்லூர் வேப்பங்குளத்தை சேர்ந்த காளிராஜ் (வயது 34), கலியாவூர் வடக்கு தெருவை சேர்ந்த வெள்ளப்பாண்டி (24), சீவலப்பேரியை சேர்ந்த சுடலைமுத்து என்ற சுரேஷ் (22) ஆகியோர் என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். மேலும் மண் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட 2 லாரிகள், ஒரு பொக்லைன் எந்திரத்தையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.


Next Story