மான் வேட்டையாடிய 3 பேருக்கு தலா ரூ.1 லட்சம் அபராதம்


மான் வேட்டையாடிய 3 பேருக்கு தலா ரூ.1 லட்சம் அபராதம்
x
தினத்தந்தி 22 April 2023 12:15 AM IST (Updated: 22 April 2023 12:19 AM IST)
t-max-icont-min-icon

கடையம் அருகே மான் வேட்டையாடிய 3 பேருக்கு வனத்துறையினர் தலா ரூ.1 லட்சம் வீதம் அபராதம் விதித்தனர்.

தென்காசி

கடையம்:

கடையம் வனச்சரகம் மத்தளம்பாறை பீட் வெளிமண்டல பகுதியில் மானை வேட்டையாடுவதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் அந்த பகுதியில் வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது குடியிருப்பு கிராமம் தங்கம்மன் கோவில் தெருவை சேர்ந்த தங்கபாண்டி என்பவரின் மகன் கணேசன் (வயது 25), காசிமேஜர்புரம் வல்லவ விநாயகர் கோவில் தெருவை சேர்ந்த முருகன் மகன் செண்பகம் (34), தென்காசி மின்நகரை சேர்ந்த பாண்டியன் மகன் பிரபு ராஜா (36) ஆகிய 3 பேர் மானை வேட்டையாடியது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 3 பேருக்கும் தலா ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டு வசூலிக்கப்பட்டது. மேலும் இந்த வழக்கில் சம்பந்தப்பட்டவர்களை வனத்துறையினர் தேடி வருகின்றனர்.


Next Story