பரிசு விழுந்ததாக கூறி பண மோசடியில் ஈடுபட்ட 3 பேர் கைது


பரிசு விழுந்ததாக கூறி பண மோசடியில் ஈடுபட்ட 3 பேர் கைது
x

பரிசு விழுந்ததாக கூறி பண மோசடியில் ஈடுபட்ட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

திருநெல்வேலி

நெல்லை மாவட்டம் கீழதென்கலத்தை சேர்ந்தவர் காசிராமர் (வயது 50). இவரின் செல்போன் எண்ணிற்கு தொடர்பு கொண்ட மர்மநபர், உங்கள் எண்ணிற்கு மோட்டார், டி.வி., தங்க நாணயம் போன்ற பரிசு பொருட்கள் விழுந்துள்ளது. இதனை பெற பணம் செலுத்த வேண்டும் என்று கூறியுள்ளார். இதனை நம்பி அவர் 2 தவணைகளாக ரூ.36 ஆயிரத்து 550-ஐ கட்டியுள்ளார். பின்னர் எந்த அழைப்பும் வரவில்லையாம். அதேபோல் மேலசெவலை சேர்ந்த சங்கர் என்பவரும் ரூ.42 ஆயிரம் கட்டி ஏமாந்து உள்ளார். இதுகுறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் செய்யப்பட்டது.

இந்த புகாரின் மீது நடவடிக்கை எடுக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரவணன், சைபர் கிரைம் போலீசாருக்கு உத்தரவிட்டார். அதன்பேரில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ராஜு மேற்பார்வையில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜூ, சப்-இன்ஸ்பெக்டர் ராஜரத்தினம் ஆகியோர் அடங்கிய போலீசார் தீவிர விசாரணை நடத்தி சங்கரன்கோவில் லட்சுமிபுரத்தை சேர்ந்த இசக்கிமுத்து (28), பாரதியார் தெருவை சேர்ந்த அய்யனார் (24), காளீஸ்வரன் (24) ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடம் இரு்து கார், ஏ.டி.எம். கார்டு, 3 செல்போன்கள், டி.வி., 3 மிக்சி, பரிசு கூப்பன்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன.


Next Story