பெரம்பலூர் சர்க்கரை ஆலையில் 3 லட்சத்து 43 ஆயிரம் டன் கரும்பு அரவை


பெரம்பலூர் சர்க்கரை ஆலையில் 3 லட்சத்து 43 ஆயிரம் டன் கரும்பு அரவை
x

2022-23-ம் ஆண்டிற்கு பெரம்பலூர் சர்க்கரை ஆலையில் 3 லட்சத்து 43 ஆயிரம் டன் கரும்பு அரவை செய்யப்பட்டது.

பெரம்பலூர்

பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை தாலுகா, எறையூர் கிராமத்தில் பெரம்பலூர் சர்க்கரை ஆலை உள்ளது. இந்த ஆலையில் 2022-23-ம் ஆண்டிற்கான கரும்பு அரவை பணி கடந்த டிசம்பர் மாதம் 22-ந்தேதி தொடங்கியது. கரும்பு அரவை பணி நேற்று முன்தினத்துடன் நிறைவடைந்தது. 144 நாட்களில் சுமார் 3 லட்சத்து 43 ஆயிரத்து 772 டன் கரும்பு அரைக்கப்பட்டிருக்கிறது. ஆலையில் சுமார் 3 லட்சத்து 29 ஆயிரத்து 104 குவிண்டால் சர்க்கரை உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. வெளி ஆலைக்கு 17 ஆயிரத்து 423 டன் அனுப்பப்பட்டுள்ளது. மேலும் கரும்பு விவசாயிகளுக்கு இதுவரை இல்லாத வகையில் உடனுக்குடன் பணம் வழங்க ஆணையிட்ட தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் வேளாண்மைத்துறை அமைச்சருக்கும் அனைத்து கரும்பு விவசாயிகள் நன்றியை தெரிவித்து கொண்டனர்.


Next Story