மாணவர்கள் சேர்க்கைக்கு நாளை 2-ம் கட்ட கலந்தாய்வு


மாணவர்கள் சேர்க்கைக்கு நாளை 2-ம் கட்ட கலந்தாய்வு
x

மாணவர்கள் சேர்க்கைக்கு நாளை 2-ம் கட்ட கலந்தாய்வு நடைபெறுகிறது.

கரூர்

குளித்தலை டாக்டர் கலைஞர் அரசு கலைக்கல்லூரியில் மாணவ-மாணவிகள் சேர்க்கைக்கான 2-ம் கட்ட கலந்தாய்வு நாளை தொடங்க உள்ளது. இக்கல்லூரியில் 2023-2024-ம் கல்வியாண்டில் இளநிலை பாடப்பிரிவில் மாணவர் சேர்க்கைக்கான முதற்கட்ட கலந்தாய்வு முடிவடைந்த நிலையில், முதல் கட்ட கலந்தாய்வில் மாணவ-மாணவிகள் சேர்க்கை பெற்ற இடங்கள் போக மீதமுள்ள இடங்களுக்கு 2-ம் கட்ட கலந்தாய்வு நாளை (வியாழக்கிழமை) தொடங்குகிறது. இதையொட்டி நாளை காலை 10 மணிக்கு வணிகவியல், வணிக நிர்வாகவியல் மற்றும் வணிகவியல் கணினி பயன்பாட்டியல் பாடப்பிரிவுகளுக்கு சேர்க்கை நடைபெற உள்ளது.

நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) அறிவியல் பாடப்பிரிவுகளுக்கான பி.எஸ்சி. கணிதம், இயற்பியல், மின்னணுவியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல், கணினி அறிவியல், உணவு மற்றும் ஊட்டச்சத்துவியல் மற்றும் கணினி பயன்பாட்டியல் ஆகிய பாடப்பிரிவுகளுக்கும், 10-ந்தேதி மொழிப்பாடங்களான தமிழ் மற்றும் ஆங்கிலத்திற்கும் கலந்தாய்வு நடைபெற உள்ளது. இந்த கலந்தாய்வுக்கான அழைப்பு மாணவர்களுக்கு துறைவாரியாக விடுக்கப்பட்டுள்ளது. தகவல் கிடைக்கப்பெற்ற மாணவ-மாணவிகள் தாங்கள் சேர விரும்பும் பாடப்பிரிவுகளுக்காக நடத்தப்படும் கலந்தாய்வு நாட்களில் கலந்து கொள்ளுமாறு கல்லூரி முதல்வர் ரவிச்சந்திரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.


Next Story