வாலிபருக்கு 25 ஆண்டு சிறை


வாலிபருக்கு 25 ஆண்டு சிறை
x

16 வயது சிறுமியை பலாத்காரம் செய்த வாலிபருக்கு 25 ஆண்டு சிறை

திருப்பூர்

திருப்பூர்

கேரள மாநிலம் பாலக்காட்டை சேர்ந்தவர் சிபி (வயது 23). இவர் திருப்பூர் போயம்பாளையம் பகுதியில் பனியன் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். கடந்த ஆண்டு இவர் தன்னுடன் வேலை செய்த 16 வயது சிறுமியை திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்தார். இது குறித்த புகாரின் பேரில் திருப்பூர் வடக்கு மகளிர் போலீசார் போக்சோ பிரிவில் வழக்கு பதிவு செய்து சிபியை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இது தொடர்பான வழக்கு விசாரணை திருப்பூர் மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. போக்சோ பிரிவுக்கு 20 ஆண்டு சிறை தண்டனை, ரூ.ஆயிரம் அபராதம், திருமணம் செய்வதாக கடத்திய குற்றத்திற்கு 5 ஆண்டு சிறை தண்டனை, ரூ.ஆயிரம் அபராதம், இதை சிபி, ஏக காலத்தில் அனுபவிக்கவும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ.25 ஆயிரம் வழங்கவும் நீதிபதி பாலு தீர்ப்பளித்தார். இந்த வழக்கில் அரசு தரப்பில் அரசு வக்கீல் ஜமீலா பானு ஆஜராகி வாதாடினார்.


Next Story