25 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்
ஜோலார்பேட்டை நகராட்சி பகுதியில் அதிகாரிகள் நடத்திய சோதனையில் 25 கிலோ பிளாஸ்டிக் பறிமுதல் செய்யப்பட்டது.
ஜோலார்பேட்டை
ஜோலார்பேட்டை நகராட்சி பகுதியில் அதிகாரிகள் நடத்திய சோதனையில் 25 கிலோ பிளாஸ்டிக.் பறிமுதல் செய்யப்பட்டது.
ஜோலார்பேட்டை நகராட்சி ஆணையாளர் பழனி தலைமையில் சுகாதார ஆய்வாளர் குமார் மற்றும் தூய்மை பணி மேற்பார்வையாளர்கள் புது ஓட்டல் தெரு வக்கணம்பட்டி கடைத்தெரு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள பெட்டி கடைகள் மற்றும் மளிகை கடைகளில் தீவிர சோதனை செய்தனர்.
புது ஓட்டல் தெருவில் உள்ள கடையில் தடை செய்யப்பட்ட ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறிய கூடிய பிளாஸ்டிக் சுமார் 25 கிலோ இருந்ததை பறிமுதல் செய்து கடையின் உரிமையாளருக்கு ரூ.1,900 அபராதம் விதித்தனர்.
மேலும் சில கடைகளிலும் அவர்கள் பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்தனர். இந்த கடைகளில் மீண்டும் பிளாஸ்டிக் விற்பனை செய்தது தெரியவந்தால் சீல் வைத்து சட்ட பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும் என நகராட்சி ஆணையர் எச்சரித்தார்.