நூல் விலை உயர்வை கண்டித்து நாமக்கல் பள்ளிப்பாளையத்தில் 3-வது நாளாக ஜவுளி உற்பத்தி நிறுத்தம்


நூல் விலை உயர்வை கண்டித்து நாமக்கல் பள்ளிப்பாளையத்தில் 3-வது நாளாக ஜவுளி உற்பத்தி நிறுத்தம்
x
தினத்தந்தி 18 May 2022 9:06 PM IST (Updated: 18 May 2022 9:06 PM IST)
t-max-icont-min-icon

பள்ளிப்பாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சுமார் 35 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விசைத்தறிகள் இயக்கப்படவில்லை.

நாமக்கல்,

நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையத்தில் நூல் விலை உயர்வை கட்டுப்படுத்த வலியுறுத்தி 3-வது நாளாக ஜவுளி உற்பத்தியாளர்கள் மற்றும் விசைத்தறி தொழிலாளர்கள் இன்று வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால் பள்ளிப்பாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சுமார் 35 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விசைத்தறிகள் இயக்கப்படவில்லை. நூல் விலையை கட்டுப்படுத்தவும், நூலை பதுக்கி விற்பனை செய்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவும் விசைத்தறி உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

Next Story