ஜக்கி வாசுதேவ் வரைந்த ஓவியங்கள் மூலம் கிடைத்த ரூ.9 கோடி, நிவாரணப் பணிகளுக்கு வழங்கப்பட்டது


ஜக்கி வாசுதேவ் வரைந்த ஓவியங்கள் மூலம் கிடைத்த ரூ.9 கோடி, நிவாரணப் பணிகளுக்கு வழங்கப்பட்டது
x
தினத்தந்தி 8 July 2020 1:36 AM IST (Updated: 8 July 2020 1:36 AM IST)
t-max-icont-min-icon

ஜக்கி வாசுதேவ் வரைந்த ஓவியங்கள் மூலம் கிடைத்த ரூ.9 கோடி, நிவாரணப் பணிகளுக்கு வழங்கப்பட்டது.

சென்னை,

ஈஷா அறக்கட்டளை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

ஈஷாவின் சமூக நலப் பிரிவான ‘ஈஷா அவுட்ரீச்‘ அமைப்பானது கோவை தொண்டாமுத்தூர் சுற்றுவட்டார கிராமங்களில் ஏப்ரல் 1-ந்தேதி முதல் கொரோனா நிவாரணப் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. கடந்த 3 மாதங்களுக்கு மேலாக தினமும் ஆயிரக்கணக்கான மக்களுக்கு உணவளித்து வருகிறது. கொரோனா தடுப்பு பணியில் ஈடுப்பட்டுள்ள மருத்துவர்கள், சுகாதாரப் பணியாளர்கள், காவல்துறையினர்,

தூய்மை பணியாளர்கள் உட்பட பல்வேறு பிரிவினருக்கு தேவையான உதவிகளையும் செய்து வருகிறது. இப்பணிகள் அனைத்தும் கோடிக்கணக்கான பொருள் செலவில் நடைபெறுகின்றன.

எனவே, இதற்கு நிதி திரட்டும் விதமாக ஜக்கி வாசுதேவ் 2 ஓவியங்களை வரைந்தார். அவருடைய முதல் ஓவியம் ரூ.4.14 கோடிக்கு ஏலம் போனது. இதையடுத்து, ஈஷாவின் பிரசித்தி பெற்ற காளையான ‘பைரவா’ வின் நினைவாக வரைந்த மற்றொரு ஓவியம் கடந்த மாதம் ஆன்லைன் வழியாக ஏலம்விடப்பட்டது. அந்த ஓவியம் ரூ.5.10 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டது. இந்த 2 ஓவியங்கள் மூலம் கிடைத்த ரூ.9.24 கோடி நிதி நிவாரணப் பணிகளுக்கு வழங்கப்பட்டது.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Next Story