2 வாலிபர்கள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது


2 வாலிபர்கள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
x

பாளையங்கோட்டையில் 2 வாலிபர்கள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.

திருநெல்வேலி

பாளையங்கோட்டை பெருமாள்புரம் போலீசார் குற்றச்செயல்களில் ஈடுபட்ட பூல்பாண்டி (வயது 28), அருண் என்று அருண்குமார் (23) ஆகியோரை கைது செய்து பாளையங்கோட்டை சிறையில் அடைத்தனர்.

இந்த நிலையில் இவர்களால் பொதுஅமைதிக்கு பங்கம் ஏற்படும் என்பதால் இவர்களை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க மாநகர துணை போலீஸ் கமிஷனர் சீனிவாசன், மேலப்பாளையம் உதவி போலீஸ் கமிஷனர் சதீஷ்குமார், பெருமாள்புரம் இன்ஸ்பெக்டர் வனசுந்தர் ஆகியோர் மாநகர போலீஸ் கமிஷனருக்கு பரிந்துரை செய்தனர்.

இதை கமிஷனர் ராஜேந்திரன் ஏற்று பூல்பாண்டி, அருண் ஆகியோரை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க உத்தரவிட்டார். இதற்கான உத்தரவை பாளையங்கோட்டை சிறை அதிகாரிகளிடம் இன்ஸ்பெக்டர் வனசுந்தர் நேற்று சமர்ப்பித்தார்.


Next Story