2 லாரிகள் பறிமுதல்


2 லாரிகள் பறிமுதல்
x

குண்டு கல் ஏற்றி வந்த 2 லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டது.

திருநெல்வேலி

வடக்கன்குளம்:

பழவூர் அருகே விஸ்வநாதபுரம் விலக்கில் பழவூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பார்த்தீபன் மற்றும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தது. அப்போது, அதிக பாரத்துடன் 2 லாரிகள் குண்டு கல் ஏற்றி கேரளாவிற்கு கொண்டு செல்ல முயன்றது தெரியவந்தது. அதனை ஆய்வு செய்து 2 லாரிகளையும் பறிமுதல் செய்தனர்.

மேலும், லாரி டிரைவர்களான திருவனந்தபுரத்தை சேர்ந்த தனிஷ் (வயது 31), சரண் ராஜா (29) ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story