ஸ்கூட்டர் திருடிய 2 வாலிபர்கள் கைது


ஸ்கூட்டர் திருடிய 2 வாலிபர்கள் கைது
x

கீழ்பென்னாத்தூர் அருகே ஸ்கூட்டர் திருடிய 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.

திருவண்ணாமலை

கீழ்பென்னாத்தூர்

சென்னை போரூர் ராமாபுரம் பகுதியை சேர்ந்தவர் செல்வமணி (வயது 21). திருவண்ணாமலை தாலுகா அரசுடையாம்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெகநாதன்.

இருவரும் பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்டு சிறை தண்டனை அனுபவித்தவர்கள். சிறையில் இருவரும் நண்பர்கள் ஆனார்கள்.

இந்த நிலையில் 2 பேரும் கீழ்பென்னாத்தூர் அருகே ஐங்குணம் கிராமத்தைச் சேர்ந்த விஜயலட்சுமி என்பவரது வீட்டின் முன்பு நிறுத்தி வைத்திருந்த ஸ்கூட்டரை திருடி உள்ளனர்.

மேலும் கார்ணாம்பூண்டியை சேர்ந்த பரசுராமன் என்பவர் செல்போனில் பேசியபடி நடந்து சென்றபோது ஸ்கூட்டரில் வந்த 2 பேரும் செல்போனை பறித்துக்கொண்டு கீழ்பென்னாத்தூர் நோக்கி வந்து கொண்டிருந்தனர்.

அப்போது கீழ்பென்னாத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கோவிந்தசாமி மற்றும் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.

இவர்கள் வந்த ஸ்கூட்டரை சோதனையிட்டபோது திருடி வந்தது தெரிய வந்தது. மேலும் செல்போனை பறித்து கொண்டு வந்ததை ஒப்புக்கொண்டனர்.

இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, செல்வமணி, ஜெகநாதன் இருவரையும் கைது செய்தனர்.

பின்னர் திருவண்ணாமலை கோர்ட்டில் ஆஜர் படுத்தி வேலூர் மத்திய சிறைக்கு அனுப்பி வைத்தனர்.


Next Story