2 மாணவர்கள் கைது
பெண்ணிடம் நகை பறிக்க முயன்ற 2 மாணவர்கள் கைது
திருநெல்வேலி
நெல்லை டவுன் பாரதியார் தெரு பகுதியைச் சேர்ந்தவர் மஞ்சுளா தேவி (வயது 58). இவரது வீட்டுக்கு நேற்று காலையில் 2 சிறுவர்கள் வந்து கதவை தட்டி தண்ணீர் கேட்டனர். இதயைடுத்து மஞ்சுளா தேவி தண்ணீர் எடுத்து வந்தபோது 2 சிறுவர்களும், மஞ்சுளா தேவி கழுத்தில் அணிந்திருந்த தங்க சங்கிலியை பறிக்க முயற்சி செய்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் கூச்சலிட்டார்.
உடனே அக்கம்பக்கத்தினர் விரைந்து சென்று, 2 சிறுவர்களையும் பிடித்து நெல்லை டவுன் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தியதில், அவர்கள் 2 பேரும் பாளையங்கோட்டையில் உள்ள ஒரு பள்ளிக்கூடத்தில் படித்து வந்தது தெரிய வந்தது. இதையடுத்து 2 மாணவர்களையும் கைது செய்து நெல்லை அரசு கூர்நோக்கு இல்லத்தில் சேர்த்தனர்.
Related Tags :
Next Story