லாட்டரி சீட்டுகள் விற்ற 2 பேர் சிக்கினர்
லாட்டரி சீட்டுகள் விற்ற 2 பேர் சிக்கினர்
கோவை
கோவை சாய்பாபா காலனி மேட்டுப்பாளையம் ரோட்டில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்யப்படுவதாக சாய்பாபா காலனி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் சம்பவ இடத்துக்கு சப்-இன்ஸ்பெக்டர் பிரேம் சுகுமார் தலைமையில் போலீசார் விரைந்து சென்றனர். அப்போது அங்கு தமிழக அரசால் தடை செய்யப்பட்ட டாக்டரின் சீட்டுகளை விற்பனை செய்த கவுண்டம்பாளையத்தை சேர்ந்த சந்தோஷ் (வயது 39) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 12 லாட்டரி சீட்டுகள் மற்றும் ரூ.300 ரொக்கம் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.
இதேபோல் குனியமுத்தூர் பாலக்காடு ரோட்டில் ஆன்லைனில் லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்வதாக குனியமுத்தூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் மணிகண்டன் தலைமையில் போலீசார் அங்கு சென்று விசாரணை நடத்தினர். அப்போது ஆன்லைனில் லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்தது நரசிம்மபுரம் பகுதியை சேர்ந்த சம்பத் (40), அதே பகுதியை சேர்ந்த பிரபு (40) ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 2 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன.